மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கிடும் சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி …

மதுரை மாவட்டம், 4 ஆண்டுகளில் 950 மாற்றுத்திறனாளிகள் ரூ.59,380,232ஃ- மதிப்பீட்டில் பெட்ரோல் ஸ்கூட்டர்கள் பெற்று பயன். பெட்ரோல் ஸ்கூட்டர் பெற்று பயனடைந்த பயனாளிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி.
அரசுமாற்றுத்திறனாளிகள் நலனுக்காக தமிழ்நாடு அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாதாந்திர உதவித்தொகை, உதவி உபகரணங்கள், சுயதொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடனுதவி, வேலைவாய்ப்பு முகாம்கள், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் கூட்டர்கள் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களுக்கெல்லாம் மகுடம் வைப்பதுபோல், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளின் குரல், உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்க வேண்டுமென்ற நோக்கில் தமிழகத்தில் உள்ள அனைத்து வகை உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கிடும் சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி உள்ளார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்த திட்டமாக விளங்குகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பெட்ரோல் ஸ்கூட்டர், அவர்கள் தங்கள் இல்லத்திலிருந்து வெளியே சென்று வேலைக்கு செல்வதற்கும். படிப்பதற்கும். மற்றும் தேவையான பிற பணிகளைச் செய்வதற்கும் பிறர் உதவியை எதிர்பாராமல் வசதியான மற்றும் சுதந்திரமான போக்குவரத்து முறையாக உதவுகிறது.மற்றமாற்றுத்திறனாளிகள் தங்கள் பயணங்களை தன்னிச்சையாக திட்டமிட்டுக்கொள்ளவும், போக்குவரத்து முறைகளைப் போலல்லாமல். ஸ்கூட்டர் பயன்படுத்துவது மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக கவனம் செலுத்தி தங்கள் பயணங்களை மேற்கொள்ள உதவுகிறது. தாழ்வு மனப்பான்மையை அகற்றி அனைவருடனும் இணைந்து சமூகத்தில் முன்னேறுவதற்கும், பொருளாதார ரீதியாக சுயசார்பாக இருப்பதற்கும் உதவுகிறது.

தொடர்புடைய செய்திகள்