முதுகுளத்தூர் பகுதியில் செயல்படும் அனைத்து பள்ளிக்கூடங்களிலும் CCTV கேமரா பொருத்த கோரிக்கை.

முதுகுளத்தூர் பகுதியில் செயல்படும் அனைத்து பள்ளிக்கூடங்களிலும் CCTV கேமரா பொருத்த கோரிக்கை.

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள் செயல்படுகிறது. இதில் மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகளில் நடைபெறும் குற்றச்சம்பவங்கள் மற்றும் பாதுகாப்பு நலன் கருதி சில பள்ளிக்கூடங்களில் CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இதை போன்று அனைத்து பள்ளிக்கூடங்களிலும் CCTV கேமராக்கள் பொருத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். CCTV கேமராக்கள் பொருத்தாமல் மாணவ, மாணவிகள் மீது அக்கரையின்றி செயல்படும் பள்ளி நிர்வாகத்தின் மீது துறைரீதியான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் காலங்களில் அனைத்து பள்ளிக்கூடங்களிலும் CCTV கேமராக்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதையும் அதிகாரிகள் முறையாக கண்காணிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தொடர்புடைய செய்திகள்