வீடு வீடாக சென்று 20 -வது பகுதியில் திமுக நகரச் செயலாளர் தலைமையில் திமுகவினர் உறுப்பினர் சேர்க்கை.

வீடு வீடாக சென்று 20 -வது பகுதியில் திமுக நகரச் செயலாளர் தலைமையில் திமுகவினர் உறுப்பினர் சேர்க்கை
தேனி மாவட்டம் போடி 20- வது பகுதியில் ஓரணியில் தமிழ்நாடு மூலம் உறுப்பினர் சேர்க்கை,கொள்கை விளக்கம்,இல்லம் தோறும் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி நகரச் செயலாளர் புருசோத்தமன் தலைமையிலும் , நகர்மன்ற உறுப்பினர் தேனி வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில் நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்நிகழ்வில் 20 வது பகுதியில் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.இந்நிகழ்வில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சங்கர் ,மாவட்ட பிரதிநிதி கல்யாணி முருகேசன், முகமது பஷீர்,மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் மாயக்கண்ணன்,கலை இலக்கியப் பேரவை மாவட்ட தலைவர் வழக்கறிஞர் முருகன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்