வடக்கூர் வழிவிடு முருகன் கோவில் அருகேயுள்ள ஊரணி பராமரிக்கப்படாமல்…

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள வடக்கூர் வழிவிடு முருகன் கோவில் அருகேயுள்ள ஊரணி பராமரிக்கப்படாமல் முட்செடிகள் வளர்ந்தும் குப்பை தொட்டியாகி உள்ளது. போதிய பராமரிப்பு இல்லாமல் அதன் அடையாளத்தை இழந்துள்ளது. இதை சுத்தம் செய்து அகற்றி நடவடிக்கை எடுக்க இப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். ஊரணிகள் நிலத்தடி நீராதாரத்தை பாதுகாக்கின்றன. நிலத்தடி நீர் 40 அடியில் கிடைத்தாலும் உப்பு நீராகவே உள்ளது. இதனால் மக்கள் அன்றாட குடிநீர், சமையல் செய்வதற்கு தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. குடியிருப்பு பகுதியை ஒட்டி அமைந்துள்ள இந்த ஊரணி பல ஆண்டுகளுக்கு முன்பு ஆழப்படுத்தி முறையாக பராமரிக்கப்பட்டது. ஆனால் தற்போது தொடர் கண்காணிப்பு இல்லாமல் ஊரணி குப்பை, மற்றும் கழிவுநீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஊரணியின் கரை பகுதி முழுவதும் செடிகள் வளர்ந்துள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஊரணியை ஆக்கிரமித்துள்ள செடிகளை அகற்றி ஆழப்படுத்தி கரையை பலப்படுத்தி நீர்வரத்து வாய்க்கால்களை தூர்வாரி செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்