ரூபாய் 56.49 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு மாதிரிப்பள்ளி கட்டிடம்…
திருச்சிராப்பள்ளி மாவட்டம், துவாக்குடி அரசு பல்தொழில் நுட்ப கல்லூரி வளாகத்தில் பொதுப்பணித்துறை சார்பில் ரூபாய் 56.49 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு மாதிரிப்பள்ளி கட்டிடம் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கான விடுதிக் கட்டிடங்கள் கட்டுமானப்பணிகள் நடைபெற்றுவருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், இஆ.ம அவர்கள் இன்று (19.04.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில்,வருவாய் கோட்டாட்சியர் அருள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் உள்ளனர்.