சிங்கபெருமாள் கோயில் அருகே மிக பழைமையான பழண்டியம்மன் ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷேகம்..

சிங்கபெருமாள் கோயில் அருகே மிக பழைமையான பழண்டியம்மன் ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷேகம்..

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோயில் செங்குன்றம் சாலையில் மிக பழமையான அருள்மிகு ஶ்ரீபழண்டியம்மன் ஆலயம் உள்ளது.இந்த பழண்டியம்மன் செங்கமலரில் நின்றவள் சிங்கமுகனின் சோதரி சங்கு சக்ர தாரினி,தர்ம சிம்ம வாஹினி, குழந்தைவரம் தருபவள் மங்கையரின் துயர் தீர்க்கும் மாங்கல்ய சுவருபிணி,
ஸ்ரீசக்ரவாசினி கலியுகத்தை காக்கவந்த சூலினி, என்று பக்தர்களால் போற்றப்படும்
சிங்கபுரி என்றழைக்கப்படும் சிங்கபெருமாள்
கோயிலில் அருளாட்சி செய்துவரும்
ஸ்ரீ பழண்டியம்மன் என்னும் திவ்யநாமத்துடன் வேண்டுவோர்க்கு வேண்டிய வரங்களை வேண்டியவண்ணம் செய்து கொடுப்பவள் என அப்பகுதி மக்கள் பரபூரணபாக நம்பிக்கை வைத்துள்ளனர்.

அப்படிப்பட்ட இந்த ஶ்ரீபழண்டியம்மன ஆலயத்தின் புணராவர்த்தன, ஜீர்ணோத்தாரணம் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக வைபவம் இன்றயதினம் துவிதியை திதி, புனர்பூசம் நட்சத்திரம், சித்த யோக சுபதினத்தில் காலை 08.15 மணிக்குமேல் 09.45 மணிக்குள் சிம்ம லக்னத்தில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த வைபவத்தில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளின் ஆசியையும் அருளையும் பெற்று சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்