பெரம்பலூர் மாவட்டம்உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் சிறப்பு முகாம்கள் குறித்த விளக்கத் துண்டு பிரசுரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் பெரம்பலூர் நகராட்சி பகுதிகளில் வீடு வீடாக வழங்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் இ.ஆ.ப., பார்வையிட்டு சிறப்பு முகாம்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கினார்.
பெரம்பலூர் நகராட்சி வார்டு எண் – 1 பகுதிக்குட்பட்ட கணபதி நகரில், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் சிறப்பு முகாம்கள் குறித்த விளக்கத் துண்டு பிரசுரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்கள் வீடு வீடாக வழங்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் இ.ஆ.ப., இன்று (11.07.2025) பார்வையிட்டு சிறப்பு முகாம்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு அரசின் சேவைகள் அனைத்து தரப்பு பொதுமக்களுக்கும் விரைவாகவும், எளிதாகவும் கிடைத்திடும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில், 10,000 முகாம்களாக உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நடத்தப்படவுள்ளது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் நகர் மற்றும் கிராமப்புறத்தில் 86 முகாம்கள் நடைபெறவுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக பெரம்பலூர் நகராட்சி 1 மற்றும் 2வது வார்டில் உள்ளவர்களுக்கு 15.07.2025 அன்று செவ்வாய்க்கிழமை வடக்கு மாதவி ரோட்டில் உள்ள NSK திருமண மண்டபத்திலும், 3 மற்றும் 4வது வார்டில் உள்ளவர்களுக்கு 17.07.2025 அன்று வியாழக்கிழமை எளம்பலூர் ரோட்டில் உள்ள கர்ணம் சகுந்தலா சுப்ரமணியம் திருமண மண்டபjதிலும், அரும்பாவூர் பேரூராட்சியில் 1 முதல் 8 வார்டுகளுக்கு உட்பட்டவர்களுக்கு 15.07.2025 அன்று செவ்வாய்க்கிழமையும், 9 முதல் 15 வார்டுகளுக்குட்பட்டவர்களுக்கு18.07.2025 அன்று வெள்ளிக்கிழமையும். அ.மேட்டூர் ரெட்டியார் திருமண மண்டபத்தில் முகாம் நடைபெறும்.
வேப்பூர் வட்டத்திற்குட்பட்ட பேரளி, சித்தளி, அசூர் ஊராட்சிகளுக்கு சித்தளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 15.07.2025 அன்று செவ்வாய்க்கிழமையும், ஒதியம், மூங்கில்பாடி பெரியம்மா பாளையம் ஊராட்சிகளுக்கு மூங்கில்பாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 15.07.2025 அன்று வியாழக்கிழமையும், ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட எலந்தலப்பட்டி, டி.களத்தூர் ஊராட்சிகளுக்கு 16.07.2025 புதன்கிழமை எலந்தலப்பட்டி துரைசாமி ரெட்டியார் திருமண மண்டபத்திலும், நக்கசேலம், சிறுவயலூர் ஊராட்சிகளுக்கு 18.07.2025 அன்று வெள்ளிக்கிழமை நக்கசேலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும் முகாம்கள் நடைபெறும்.
முகாம்களில் பொதுமக்கள் கொடுக்க வேண்டிய விண்ணப்ப படிவங்கள் மற்றும் அரசுத்துறைகள் வழங்கும் பல்வேறு சேவைகள் குறித்த விளக்க பிரசுரங்கள் ஆகியவை இதற்கென நியமிக்கப்பட்ட தன்னார்வலர்களும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களும் அந்தந்தப் பகுதியில் வசிப்பவர்களுக்கு வீடு வீடாக நேரடியாகச் சென்று முகாம் நடைபெறும் வழங்கி வருகின்றனர்.
பெரம்பலூர் நகராட்சி வார்டு எண் – 1 பகுதிக்குட்பட்ட கணபதி நகரில், இது தொடர்பான பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முகாம் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்து, முகாம் நடைபெறும் நாள், இடம் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
பின்னர், அந்த பகுதியிலுள்ள பொதுமக்கள் அனைவருக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கி இம்முகாம் தொடர்பாக பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி முகாம் நடைபெறும் நாளில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு , அரசின் திட்டங்கள் கிடைக்கப்பெற வழிவகை செய்ய வேண்டும் என நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சொர்ணராஜ், நகராட்சி ஆணையர் .ராமர் மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
