மதுரை மாவட்டம். அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலன் காக்கும் அரசு வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி.

மதுரை மாவட்டம்

அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலன் காக்கும் அரசு

வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி.

மதுரை மாவட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பாக சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் 1,18,853 அமைப்பு சாரா தொழிலாளர் பயனாளிகள் ரூ. 100.33 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நடத்திட்ட உதவிகள் பெற்று பயனடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டிலுள்ள அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தவும், அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கவும், தமிழ்நாடு அரசு 1982-ஆம் ஆண்டில் தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (பணிநிலைமைகள் முறைப்படுத்துதல்) சட்டத்தினை இயற்றியது. அதனையடுத்து கட்டுமான தொழிலாளர்கள் அமைப்பு சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள், சமையல் தொழிலாளர்கள், ஓவியர்கள், வீட்டுப் பணியாளர்கள், தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிலாளர்கள், பொற்கொல்லர், முடித்திருத்துவோர், கைவினைத் தொழிலாளர்கள், கைத்தறி மற்றும் பட்டு நெய்யும் தொழிலாளர்கள், உடலுழைப்பு தொழிலாளர்கள், பனைமரத் தொழிலாளர்கள், மண்பாண்ட தொழிலாளர்கள், விசைத்தறி நெசவாளர்கள், தையல் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், பாதையோர வணிகர்கள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் என தமிழ்நாடு அரசின் மூலம் 18 நலவாரியங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இயங்கி

தொழிலாளர் துறையின்கீழ்

வரும் 18 நலவாரியங்களில்

உறுப்பினர்களாக பதிவு பெறுவதற்கு வயது வரம்பு 18 வயது முதல் 60-க்குள் இருத்தல் வேண்டும். உறுப்பினர்களாக பதிவு செய்வது, புதுப்பித்தல், கேட்புமனுக்கள் போன்றவை www.tnuwwb.tn.gov.in என்ற இணைய வழியில் விண்ணப்பிக்க தமிழக அரசால் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் 1,86,121 நபர்கள் பதிவு பெற்ற அமைப்பு சாரா தொழிலாளர்களாக உள்ளனர்.

அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலனுக்காக தமிழ்நாடு அரசு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, வீட்டுவசதித் திட்டம், மாதாந்திர ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரணம், பணியிடத்து விபத்து மரணம் உள்ளிட்ட 14 வகையான அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்தகைய நலத்திட்டங்களின் கீழ், மதுரை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் (மே 2021 முதல் பிப்ரவரி 2025 வரை) மொத்தம் 1,18,853 அமைப்பு சாரா தொழிலாளர் பயனாளிகள் ரூ.100,33,53,127 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நடத்திட்ட உதவிகள் பெற்று பயனடைந்துள்ளனர்.

குறிப்பாக, 83,266 பயனாளிகளுக்கு ரூ.16.91 கோடி மதிப்பீட்டில் கல்வி உதவித்தொகையும், 2004 பயனாளிகளுக்கு ரூ.29.61 கோடி மதிப்பீட்டில் திருமண உதவித்தொகையும், வீட்டு வசதி திட்டத்தின் கீழ், 209 பயனாளிகளுக்கு ரூ.3.68 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 18,748 பயனாளிகள் மாதாந்திர ஓய்வூதியமாக தலா ரூபாய் 1,200 பெற்று பயனடைந்து

வருகின்றனர். மாதாந்திர ஓய்வூதியமாக மட்டும் இதுவரை ரூ.63.87 கோடி மதிப்பீட்டில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவரும் நலவாரியங்களில் உறுப்பினர்களாக பதிவு செய்வதன் மூலம் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடைய முடியும். பதிவு செய்வதற்கு www.tnuwwb.tn.gov.in என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மதுரை எல்லீஸ் நகர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அலுவலக முதல் தளத்தில் செயல்பட்டு வரும் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.

ஆத்திக்குளம் திட்டப் பகுதியில் உள்ள குடியிருப்பில் வசிக்கும் திரு.சரவணன் ஜெயபாரதி தம்பதியினர் தெரிவித்ததாவது:-

தொடர்புடைய செய்திகள்