கீழக்கரையில் ஒன்றிய நவ பாசிச பாஜக அரசு …
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ஒன்றிய நவ பாசிச பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றிய வக்பு திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலகுழுவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தாலுகா ஒருங்கிணைப்பாளர் எம்.மாரியப்பன் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் கே. பாலபாரதி கண்டன ஆர்ப்பாட்டத்தின் விளக்க உரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்தவர்கள் மத்திய பாஜக அரசை எதிர்த்து கோஷமிட்டனர்.